மலப்புரம்(கேரளா): கேரளா மாநிலம் கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த தம்பதியினரிடம் இருந்து 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று தரையிறங்கிய விமானத்தில் வந்த அப்துல் சமத் மற்றும் அவரது மனைவி சஃப்னா ஆகியோர் தங்கம் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து விமானத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ தம்பதியினர் இருவரும் அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக சஃப்னா கர்ப்பிணி என நாடகமாடியது கண்டறியப்பட்டது. இருவரும் அவர்களது உள்ளாடையிலும், உடல் உறுப்புகளிலும் மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.
விமான நிலையத்தில் இது வரை பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தில் இதுவே அதிக அளவாகும் எனத் தெரிவித்தனர். சஃப்னா அவர் கர்ப்பமாக உள்ளார் எனக்கூறி அதிகாரிகளை ஏமாற்றி சிறப்பு வசதி மூலம் எடுத்துச் செல்லலாம் என திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:டெல்லியில் அழகிகள் கைது