ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் சூடிபிடிக்கும் தேர்தல் களம் - தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு! - தேர்தல் ஆணையம் செய்திகள்

டெல்லி: தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளை கண்காணிக்கும் வகையில் தலைமை தேர்தல் ஆணையத்தின் பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா அம்மாநிலத்திற்கு செல்லவுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையம்
தலைமை தேர்தல் ஆணையம்
author img

By

Published : Dec 20, 2020, 4:51 PM IST

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிகளை கண்காணிக்கும் வகையில் தலைமை தேர்தல் ஆணையத்தின் பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா தமிழ்நாட்டிற்கு செல்லவுள்ளார். டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில், மூத்த அலுவலர்களை சந்தித்து தேர்தல் தயார்நிலை குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர், துணை தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பாக, தேர்தல் ஆணையத்தின் மூத்த அலுவலர்கள் அங்கு சென்று வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட தயார்நிலை குறித்து ஆலோசிக்கவுள்ளனர். கரோனா காலத்தில் தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்யவுள்ளனர்.

முன்னதாக, துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின் மேற்குவங்கத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அடுத்தாண்டு மே மாதம், மேற்குவங்கம், அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைவதால், அதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.