மாவட்ட அலுவலர்கள் பணியில் உள்ளார்களா? கிராமத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்களா? என்பதை அறியும் நோக்கில் அவர்கள் வாட்ஸ்அப் மூலம் லொகேஷனைப் பகிர வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், பலர் லைவ் லொகேஷனைப் பகிராமல் குறுஞ்செய்தி மூலம் கள ஆய்வு மேற்கொள்ளும் விவரங்களைப் பகிர்ந்தனர்.
இந்நிலையில், மாவட்ட அலுவலர்களின் வருகையைப் பதிவுசெய்யும் நோக்கில் வாட்ஸ்அப் மூலம் லைவ் லொகேஷனைப் பகிர வேண்டும் எனப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "காலை, இரவு வேலைகளில் வருகைப் பதிவை கணக்கிடும் நோக்கில் மாவட்ட அலுவலர்கள் லைவ் லொகேஷனை வாட்ஸ்அப் மூலம் பகிர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காகவே, அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் பிரத்யேக வாட்ஸ்அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அலுவலர்கள் அனுப்பும் வாட்ஸ்அப் லைவ் லொகேஷன் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். உத்தரவை மதிக்காதவர்களின் வருகைப் பதிவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதுமட்டுமின்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.