ETV Bharat / bharat

முள்கரண்டியால் தரையிறங்கிய விமானம் - பிரயக்ராஜ் விமான நிலையம்

உத்தரப்பிரதேசத்தில் விமான நிலைய சோதனையில் அலுவலர்களின் அலட்சியத்தால் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய சோதனையில் அலட்சியம் ; அதிருப்தி அடைந்த பயணிகள்

author img

By

Published : Sep 21, 2022, 9:42 PM IST

Updated : Sep 21, 2022, 9:54 PM IST

உத்தரப்பிரதேசம்(பிரயக்ராஜ்): சங்கம் நகரமான பிரயாக்ராஜ் பண்டிட் தீனதயாள் விமான நிலையத்தில், பாதுகாப்பில் அலட்சியம் காட்டிய விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, பிரயாக்ராஜில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தின் உள்ளே, ஒரு பயணி டிபன் பாக்ஸில் ஃபோர்க்(Fork) ஸ்பூனை வைத்துக் கொண்டு விமானத்தில் அமர்ந்திருந்தார். விமானம் புறப்பட்டவுடன், பயணி தனது டிபன் பாக்ஸை வெளியே எடுத்தார்.

பயணியின் கையில் ஃபோர்க் ஸ்பூன் இருப்பதைப் பார்த்த ஊழியர்கள் விமானிக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏடிசியிடம் பேசி விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கியவுடன், அந்தப் பயணியிடம் இருந்த ஃபோர்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, விமானத்தில் இருந்து வெளியே கொடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் சிறிது நேரத்தில் டெல்லிக்குப் புறப்பட்டது.

ஃபோர்க் ஸ்பூனுடன் பயணி எப்படி விமானத்திற்குள் சென்றார் என்பது குறித்து விமான நிலையத்தின் பாதுகாப்பு அமைப்பில் கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில், விமானத்தின் உள்ளே செல்லும் முன், பல இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. ஸ்கேனர் வழியாக சென்றாலும், பயணி ஒரு முட்கரண்டி, கரண்டியுடன் விமானத்தின் உள்ளே நுழைந்துள்ளார்.

முள் கரண்டியால், இண்டிகோ விமானம் புறப்பட்டு ஓடுபாதைக்குத்திரும்பிய சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் தாமதத்திற்குப்பிறகு மீண்டும் டெல்லி புறப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் சிரமத்துக்குள்ளாகினர்.

இதனுடன், பிரயாக்ராஜ் விமான நிலைய ஆணையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விமானத்தில் இருந்த பயணிகள் கேள்வி எழுப்பினர். ஃபோர்க் ஸ்பூனுக்குப் பதிலாக வேறு ஏதேனும் ஆபத்தான பொருளை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று விமானத்தில் இருந்த பயணிகள் அச்சம் தெரிவித்தனர்.

மேலும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 5 வயதில் பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் ; 31 ஆண்டுகளுக்கு பின் ஓர் பெண் புகார்

Last Updated : Sep 21, 2022, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.