ஹைதராபாத்: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்தது. அந்த வகையில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஜூன் 17ஆம் தேதி நடந்த வன்முறையில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர். இதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரர் சுப்பா ராவ், அவரது கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முன்னதாக ராணுவத்தில் செவிலியர் உதவியாளராக பணியாற்றிய அவுலா சுப்பா ராவ், தற்போது ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நர்சரோபேட்டாவில் சாய் டிஃபென்ஸ் அகாடமியை நடத்தி வருகிறார்.
ராணுவ ஆள்சேர்ப்புக்கு பயிற்சி அளிப்பதற்காக மூன்று லட்ச ரூபாய் வரை பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில் அக்னிபாத் திட்டம் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு வெளியானது. இதனால் சுப்பா ராவ், வெவ்வேறு வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, அனைவரும் செகந்திராபாத் ரயில் நிலையத்தை அடைந்து வன்முறையில் ஈடுபட வேண்டும் என்று செய்திகளை பரப்பினார். இதனால் வன்முறை வெடித்துள்ளது. இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒடிசாவில் போக்குவரத்து விதியை மீறிய அமைச்சர், எம்எல்ஏவிற்கு அபராதம்