ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் இன்று முதல் 144 தடை உத்தரவு

author img

By

Published : Apr 13, 2021, 10:24 PM IST

Updated : Apr 14, 2021, 7:38 AM IST

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று (ஏப்.14) முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Maharashtra Chief Minister Uddhav Thackeray

இதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் இன்று இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியில் அனுமதிக்கப்படுவர்.

அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை காலை 7 முதல் இரவு 8 மணிவரை மட்டுமே நடைபெறும். பெட்ரோல் பங்குகள், கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 14 முதல் 15 நாட்களுக்கு அமலில் இருக்கும். உணவகங்கள் மூடப்பட்டிருக்கும், இருப்பினும் ஹோம் டெலிவரிக்கு அனுமதி அளிக்கப்படும்.

தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் மூடப்படும். அதன் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்" என தெரிவித்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் மகாராஷ்டிராவில் 60,212 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேவை ஏற்படும்பட்சத்தில் கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல் - எடியூரப்பா

Last Updated : Apr 14, 2021, 7:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.