ETV Bharat / bharat

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்... தொகுதி பங்கீடு, தேசிய அளவில் போராட்டம் குறித்து ஆலோசனை?

ஜூலை 17ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு, தேசிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Opposition Meet
Opposition Meet
author img

By

Published : Jul 13, 2023, 7:40 PM IST

டெல்லி : பெங்களூருவில் நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சிகளிடையேயான கருத்து பகிர்வுகள், தொகுதி பங்கீடு, தேசிய அளவிலான போராட்டங்கள், எதிர்க்கட்சிகள் ஒற்றுமை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக காங்கிரஸ் செயல்பாட்டு குழு தலைவர் சையத் நசீர் ஹூசைன் தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் திமுக உள்பட 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, மதிமுக உள்ளிட்ட 20 கட்சிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, வளர்ச்சிக்கான நேர்மறையான திட்டமிடல், தேசிய அளவில் போராட்டம் நடத்துவது, கருத்து பகிர்வு மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அனைத்து கட்சிகளும் ஆலோசனை நடத்த உள்ளதாக காங்கிரஸ் செயல்பாட்டு பிரிவு தலைவர் சையத் நசீர் ஹூசைன் தெரிவித்து உள்ளார்.

மேலும், ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற முதலாவது ஆலோசனைக் கூட்டத்தில் 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டதாகவும், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடில் பயணிக்க அனைத்து கட்சிகளும் ஒருசேர ஒப்புக் கொண்டதாகவும் சையத் நசீர் ஹூசைன் தெரிவித்தார்.

ஏற்கனவே கிழக்கு இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் தற்போது தென்னிந்தியாவில் மற்றொரு ஆலோசனைக் நடைபெற உள்ளதாகவும், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்திய நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் வலுவான செய்தியை வெளிக் கொணரும் என்று கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே ஹரி பிரசாத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குடும்பத்தில் உள்ள 9 பேருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள்.. கின்னஸ் சாதனையின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.