ETV Bharat / bharat

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு : கல்வி அமைச்சர் அறிவிப்பு - எப்போது முதல் தெரியுமா? - புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் வரும் 6ஆம் தேதி முதல் திறக்க கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு : கல்வி அமைச்சர் அறிவிப்பு
author img

By

Published : Dec 3, 2021, 8:57 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் வருகிற ஆறாம் தேதி முதல், வகுப்பு ஒன்று முதல் எட்டு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பின் காரணமாக, கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன.

பின்னர் கரோனா குறையத் தொடங்கியதால், கல்வி நிலையங்கள் அனைத்தும் படிப்படியாகத் தொடங்கப்பட்டது.

மழை வெள்ளத்தால் ஒத்திவைப்பு

இதனைத்தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை வெள்ளம் காரணமாக, பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது மழை வெள்ளப்பாதிப்புகள் குறைந்தமையால், புதுச்சேரியில் வருகின்ற ஆறாம் தேதி முதல், வகுப்பு ஒன்று முதல் எட்டு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, 'ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரைநாள் மட்டுமே பள்ளிகள் இருக்கும். அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற முறையில் பள்ளிகள் இயங்கும்.

மேலும் ஒன்பதாம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலான மாணவர்களுக்கு ஏற்கெனவே கல்வி நிறுவனங்கள் இருந்த நிலையில், ஆறாம் தேதி முதல் அவர்களுக்கு முழுநாள் கல்வி நிறுவனங்கள் இயக்கப்படும்.

அவர்களுக்கு மட்டும் மதிய உணவு வழங்கப்படும். வருகைப் பதிவேடு என்பது இருக்கும். விருப்பமுள்ளவர்கள் பள்ளிகளுக்கு வரலாம். வர விருப்பம் இல்லாதவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படும்' என்றார்.

இதையும் படிங்க:நீர் தேங்குகிறது என்ற பேச்சுக்கே இடமளிக்கக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.