டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தொடரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, டெல்லியின் காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், காற்று மாசுபாடு பூதாகரமாக வளர்ந்துவருகிறது. காற்று மாசுபாட்டில் மக்கள் வாழ்வது மிகவும் சிரமமாகிவிட்டது” என்று வேதனை தெரிவித்தார்.
மேலும், பட்டாசு, வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசிடம் திட்டங்கள் எதுவும் இல்லை. காற்று தரக் குறியீட்டை குறைக்க அரசிடம் என்ன நடவடிக்கை உள்ளது. அடுத்த மூன்று நாள்களில் நிலைமை கட்டுக்குள் வர அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், இரண்டு நாள்கள் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்திக் கொள்ளலாம்" எனவும் அரசுக்கு யோசனை வழங்கினார்.
இதையும் படிங்க: பேருந்துகளில் பாட்டுக்கேட்க தடை... போக்குவரத்து கழகம் அதிரடி...