சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீது 7 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரமும் அவரது மனைவியும், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் எனவும்; தங்கள் மீதான வரி ஏய்ப்பு புகாரில் உண்மை இல்லை எனவும் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், வருமான வரித்துறையிடம் இது தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.