மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில் "எழுபது விழுக்காடு சுகாதார சேவை, தனியார் வசம் உள்ளது. இதுதொடர்பாக சரியான சிகிச்சை நெறிமுறைகள், சுகாதார நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை தாக்கல் செய்த ஜன் ஸ்வத்ய அபியான் அமைப்பு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரிக், அரசுக்கு இதுகுறித்து பதிலளிக்கக் கோரியும் அரசு எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்றார்.
மேலும் "தேசிய மனித உரிமைகள் ஆணையமும், சுகாதார அமைச்சகமும் நோயாளிகளின் உரிமைகள் குறித்த வரைவு சாசனத்தை வகுத்துள்ளன. ஆனால் அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை" என்றார்.
இதுகுறித்து பேசிய தலைமை நீதிபதி, "இப்பிரச்னைக்கு ஏற்கனவே விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சிறிய மருத்துவ மையங்களில்கூட மருத்துவர்கள் உள்பட தேவையான பணியாளர்கள் வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.
மருத்துவர்கள் குறைவாக இருக்கும் மருத்துவ மையங்களில் பணியாளர்கள் சுமை அதிகமாகிறது. அவர்கள் தங்கள் சுமைகளை நோயாளிகளுக்கு கொடுத்துவிடுகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். அரசு நல்ல பதிலை தரும் என நம்புவோம்" என்றார்.
இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய மூத்த பத்திரிகையாளர் என்.ராம்