ETV Bharat / bharat

பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

பிபிசி ஆவணப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SC issues notice to Centre on PILs on BBC documentary on 2002 Gujarat riots

author img

By

Published : Feb 3, 2023, 3:34 PM IST

டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மூத்த பத்திரிகையாளர்கள் என் ராம், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மற்றும் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 3) நடந்தது.

அப்போது, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிபிசி ஆவணப்படம் தடை செய்தது தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் மாதம் விசாரணைக்கு பட்டியலிட்டனர். குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

அப்போது முதலமைச்சராக பிரதமர் மோடி இருந்தார். இந்த கலவரத்துக்கும் மோடிக்குமான பங்கு குறித்து பிபிசி டூ செய்தி நிறுவனம் ஆவணப்படம் உருவாக்கி ஜனவரி 17ஆம் தேதி வெளியிட்டது. இந்த ஆவணப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பிரதமர் மோடிக்கு எதிரான தகவல்களை திட்டமிட்டு பகிர்ந்துள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது.

நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மத்திய அரசு பிபிசி ஆவணப்படத்துக்கு தடைவிதித்தது. இந்த தடை தனிப்பட்டது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று மூத்த பத்திரிகையாளர்கள் என் ராம், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மற்றும் சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், மத்திய அரசால் தடைச்செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை பார்க்கவும், சட்டப்பூர்வமாக பகிரவும், அதுதொடர்பாக விமர்சனம் செய்யவும் குடிமக்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. அதேபோல, ஆவணப்படத்தின் உள்ளடக்கங்கள் பிரிவு 19(1)(a) (பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம்) சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. எந்தக் கட்டுப்பாடுகளின் கீழும் வராது.

ஆகவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தணிக்கை செய்யும் மத்திய அரசின் அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பதிலளிக்க உத்தவிட்டுள்ளது.

இதையும் படிங்க: அதானி குழும பங்குகள் தொடர் சரிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.