ETV Bharat / bharat

போபால் விஷவாயு கசிவு விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் மனு தள்ளுபடி! - போபால் விஷவாயு கசிவு மத்திய அரசு மனு தள்ளுபடி

1984 போபால் விஷவாயு கசிவு வழக்கில் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
author img

By

Published : Mar 14, 2023, 11:20 AM IST

டெல்லி: போபால் விஷவாயு கசிவு வழக்கில் கூடுதலாக 7 ஆயிரத்து 844 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில், அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைட் ரசாயன நிறுவன ஆலை செயல்பட்டு வந்தது.

1984ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இந்த ரசாயன ஆலையில் மீத்தைல் ஐசோ சயனேட் என்ற விஷ வாயு கசிந்தது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். மேலும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் இந்த கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் குணப்படுத்த முடியாத வகையிலான கொடிய நோய்களுக்கு உள்ளாகி கடும் அவதியடைந்தனர். இந்த விபத்துக்கு காரணமான அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைட் நிறுவனம் 470 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக வழங்கியது. 1989ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அதன் மதிப்பு 715 கோடி ரூபாயாக இருந்தது.

மேலும் 1989 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிவாரணமே இறுதியானது என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்நிலையில், போபால் விஷ வாயு விபத்துக்கு கூடுதலாக 7 ஆயிரத்து 844 கோடி ரூபாயை கூடுதல் இழப்பீடாக வழங்க வேண்டும் என மத்திய அரசு தப்பில் கோரப்பட்டது.

மத்திய அரசின் கோரிக்கையை அமெரிக்காவின் யூனியன் கார்பைட் நிறுவனம் ஏற்க மறுத்தது. இதையடுத்து மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான மத்திய அரசு தரப்பில் சீராய்வு மனு விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 12 தேதி, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமரிவில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, அபாய் எஸ். ஒகா, விக்ரம் நாத், மகேஸ்வர் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். விசாரணையை கேட்டறிந்த நீதிபதிகள், 30 ஆண்டுகளுக்கு பின் போபால் விஷவாயு வழக்கில் மத்திய அரசு கூடுதல் நிவாரணம் கேட்பது ஏன், முதல் வழங்கப்பட்ட நிதியில் இன்னும் 50 கோடி ரூபாய் பயன்படுத்தாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், 1989 ஆண்டு போபால் விஷ வாயு தாக்குதலால் ஏற்பட்ட இயற்கை சீரழிவுகள், பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், விளைவுகளை முழுமையாக கணக்கிடவில்லை என்றும், ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்கள் என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் வாதத்தை மறுத்த யூனியன் கார்பைட் நிறுவன வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, வழங்கப்பட்ட இழப்பீடுத் தொகை போதுமானது தான் என்றும் அரசின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். மேலும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே மறுசீராய்வு மனு தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி இப்போது மனுத் தாக்கல் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக் கூறி மத்திய அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.