ETV Bharat / bharat

சனாதன தர்மம் விவகாரம்; உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான அவமதிப்பு மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Udhayanidhi Stalin Sanatana Dharma issue: சனாதன தர்மம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவமதிப்பு மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Udhayanidhi Stalin Sanatana Dharma issue
சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்து - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான அவமதிப்பு மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 8:48 AM IST

டெல்லி: சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கு, நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி எஸ்.வி.என் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (நவ.29) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்தியா போன்ற பெரிய நாட்டில் பிரச்னைகள் இருக்கும், ஆனால் தேவையான இடங்களில் நடவடிக்கை எடுக்க போதுமான நிர்வாக இயந்திரம் நம்மிடம் உள்ளதா? என்பதுதான் கேள்வி என்று கூறினர். மேலும், நீதிமன்றங்கள் தனிப்பட்ட வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினால், முக்கியமான வழக்குகளைச் சமாளிக்க முடியாது என்று கூறிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நாடு முழுவதும் தனிப்பட்ட வழக்குகளை விசாரிப்பது சாத்தியமற்றது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா, "தனிப்பட்ட அம்சங்களை நாங்கள் கையாள முடியாது. வழக்கறிஞர் விஷ்ணுசங்கர் ஜெயின், உதயநிதி ஸ்டாலின் மீது அவமதிப்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த அவமதிப்பு மனு இங்கே பொய்யாகாது. உயர் நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள்" என்று அறிவுறுத்தி, சனாதன தர்மம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவமதிப்பு மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

முன்னதாக உச்ச நீதிமன்றம் இதே போன்ற வழக்குகளைப் பரிசீலித்ததாகவும், தனியார் நியூஸ் தொலைக்காட்சி ஆசிரியர் மீதான வழக்கை மேற்கோள் காட்டி, அந்த வழக்கு தொடரப்பட்டபோது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது என்று சுட்டிக் காட்டினார், வழக்கறிஞர் விஷ்ணுசங்கர் ஜெயின்.

இதனை அடுத்து நீதிபதிகள், 2018ஆம் ஆண்டு தெஹ்சீன் பூனவல்லா வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், வெறுப்புக் குற்றங்கள் மற்றும் கும்பல் வன்முறையைக் கையாள்வதற்காக நோடல் அதிகாரிகளை நியமித்துள்ளதா என்பது குறித்து பதிலளிக்கக் குஜராத், கேரளா, தமிழ்நாடு மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 5, 2024ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: மார்கதர்சி சிட்பண்ட் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு? ஆந்திர சிஐடிக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.