உச்ச நீதிமன்ற கொலிஜியம் பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள் இன்று (அக்.8) பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் சத்ய நாராயணா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
கொலிஜியம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் சென்னை உயர் புதிய நீதிபதியாக சத்ய நாராயணா நியமிக்கப்படுவார். இவருடன் வழக்கறிஞர் மனு காரே அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடாக உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் அனந்த் ரமாநாத் ஹெக்டே, மோனப்பா பூனாச்சா, சித்தய்யா ராச்சய்யா, கண்ணன்குயில் ஸ்ரீதரன் ஹமலேகா ஆகிய நான்கு வழக்கறிஞர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பத்து கூடுதல் நீதிபதிகளான, சுவிர் ஷேகல், அல்கா ஷரின், ஜஸ்குர்பீரித் சிங் பூரி, அசோக் குமார் வர்மா, சந்த் பிரகாஷ். மீனாக்ஷி மேத்தா, கரம்ஜித் சிங், விவேக் பூரி, அர்ச்சனா பூரி மற்றும் ராஜேஷ் பரத்வாஜ் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்யும் கொலிஜியத்தின் உறுப்பினர்களாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, யுயு லலித், ஏஎம் கான்வில்கர் ஆகியோர் உள்ளனர்.
இதையும் படிங்க: 'இந்தியா 75' - புதிய வடிவில் வெளியான 'மிலே சுர் மேரா துமாரா' பாடல்