ETV Bharat / bharat

அதானி குழும முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு! - Adani Case supreme court order

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து 2 மாதங்களில் அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதானி
அதானி
author img

By

Published : Mar 2, 2023, 2:20 PM IST

டெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக இயங்கி வரும் வர்த்தகம் மற்றும் தடயவியல் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க், இந்திய தொழில்துறையில் கோலோச்சி வரும் அதானி குழுமத்திற்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

வரி மோசடி மூலம் கிடைத்த பணத்தை ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ் போன்ற வரி விலக்கு நாடுகளில் உள்ள போலியான ஷெல் கம்பெனிகளுக்கு மாற்றி, அங்கிருந்து மீண்டும் அதானி நிறுவன பங்குகளில் முதலீடு செய்து, செயற்கையாக அந்நிறுவன சந்தை மதிப்பை, இந்திய பங்குச் சந்தையில் உயர்த்தியதாக ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நாட்டில் பெரும அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பங்குச் சந்தையில் அதானியின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது. உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்வரிசையில் இருந்த அதானி தொடர் சரிவின் காரணமாக 30 இடங்களுக்கு கீழ் இறங்கினார். மேலும் எதிர்கட்சிகள் அதானி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு நாடாளுமன்றக் கூட்டதை முடக்கின.

இந்நிலையில் அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் மனு தொடர்பான விசாரணை இன்று தொடர்ந்து நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர். தொடர்ந்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை விசாரிக்க உத்தரவிட்டனர்.

ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை இந்த குழு வெளிப்படைத்தன்மையுடன் ஆராய்ந்து இரண்டு மாதங்களில் முழு அறிக்கையை தரக் கோரி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பங்கு மதிப்பை செயற்கையாக உயர்த்த அதானி குழுமம் ஏதேனும் முயற்சி மேற்கொண்டதாக என விசாரிக்க செபிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள் காட்டி வரவேற்பதாக கூறிய கவுதம் அதானி, தனது குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு முடிவை கொண்டு வரும் என்று கூறினார்.

இதையும் படிங்க: ஜி20 மாநாடு அலங்காரத்திற்கு வைத்த பூந்தொட்டிகளை திருடியவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.