நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அருண் பரத்வாஜ், சஞ்சய் பன்சால் என்ற இரண்டு சிறப்பு நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
நாடு முழுவதும் சுரங்க ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் பாரத் பராசர் என்ற சிறப்பு நீதிபதியை 2014ஆம் ஆண்டு நியமித்தது.
அவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் தனக்கு அடுத்து நியமனம் செய்ய ஐந்து நீதிபதிகளின் பட்டியலை பரிந்துரை செய்தார்.
இந்தப் பரிந்துரையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, விசாரணையை விரைந்து முடிக்க இரண்டு நீதிபதிகளின் தேர்வு செய்துள்ளது.
அதன்படி, நீதிபதிகள் அருண் பரத்வாஜ், சஞ்சய் பன்சால் இரு நீதிமன்றகளில் நிலுவையில் உள்ள 40 வழக்குகளை விரைந்து விசாரிக்க நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய ரயில்வேயின் மற்றொரு மைல்கல்; செனாப் பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவு!