ETV Bharat / bharat

புதுச்சேரியில் சத்யஜித்ரே நூற்றாண்டு விழா- மூன்று நாட்கள் கொண்டாட்டம்

சத்யஜித்ரே நூற்றாண்டு விழா புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

சத்யஜித்ரே நூற்றாண்டு விழா  மூன்று நாட்கள் கொண்டாட்டம்  அலையன்ஸ் பிரான்சிஸ் புதுச்சேரி  hundredth day carnival  films screening  puthucherry sathajithrae film legend
விழா ஒருங்கிணைப்பாளர் எஸ். ராமச்சந்திரன்
author img

By

Published : Dec 16, 2021, 6:59 PM IST

புதுச்சேரி: இந்திய திரையுலக மேதை சத்யஜித்ரே நூற்றாண்டு விழா புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனையடுத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநில பொருளாளரும், விழா ஒருங்கிணைப்பாளருமான எஸ். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரியில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழாவை நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது புதுச்சேரி திரை இயக்கம் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் புதுச்சேரி, மத்திய திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்திய திரையுலக மேதை சத்யஜித்ரேவின் நூற்றாண்டு திருவிழாவை தற்போது நடத்தி இருக்கிறது. இத்திருவிழா வெள்ளிக்கிழமை டிச- 17 ல் துவங்கி 18,19 ஆகிய மூன்று நாட்கள் அலையன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்

இத்திருவிழாவில் சத்தியஜித்ரே உருவாக்கிய கலைத்துறைக்கு உலக அளவில் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த விருதுகள் பல பெற்ற ஒன்பது திரைப்படங்களும், ஷியாம் பெனகல் உருவாக்கிய சத்யஜித்ரே ஆவணப்படமும் திரையிடப்படவுள்ளது. துவக்க நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முதல் படமாக, உலக அளவில் அனைத்து திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்ட "பதேர் பாஞ்சாலி" திரையிடப்படவுள்ளது.

தொடக்க விழாவில் அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் டாக்டர் நல்லம் சதீஷ் வரவேற்க, தமுஎகச(தமிழக முற்போக்கு எழுத்தாளர் கழக சங்கம்) கவுரவத்தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையேற்கிறார்.இதனையடுத்து திரைக்கலைஞர்கள் திரிதிமான் சேட்டர்ஜி, எடிட்டர் லெனின், ரோகிணி, இயக்குனர்கள் சிவகுமார், லெனின் பாரதி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள். புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பிரஞ்ச் தூதர் லசிடல் போட்பரே, அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குனர் லீலா, டாக்டர்பழனி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

சிறப்பு விருந்தினர்கள்

மேலும் மூன்று நாட்கள் நிகழ்விலும் தமுஎகச பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர் வீ.பா.கணேசன், தமுஎகச திரை இயக்க நிர்வாகிகள் எஸ்.இராமச்சந்திரன், களப்பிரன், வீர.அரிகிருஷ்ணன், உமா அமர்நாத் மற்றும் கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 160க்கும் மேற்பட்ட திரை இயக்க ஆர்வலர்கள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இச்சந்திப்பின்போது அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் டாக்டர் நல்லம் சதீஷ், இயக்குனர் லீலா, தமுஎகச திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் களப்பிரன், புதுச்சேரி நிர்வாகிகள் கலியமூர்த்தி, ரவிச்சந்திரன், ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக சத்யஜித்ரே குறித்து சிறு பிரசுரம் வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க:புதுச்சேரியில் பாலியல் புகாரளித்த இளம்பெண்ணுக்கு மிரட்டல்: காவலர்கள் மீது புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.