ETV Bharat / bharat

சசிகலா உறவினர் இளவரசிக்கும் கரோனா தொற்று!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அவருடன் சிறைவாசம் அனுபவித்து வரும், உறவினர் இளவரசிக்கும் கரோனா தொற்று தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

corona confirmed ilavarasi, ilavarasi affected by corona, இளவரசி கொரோனா தொற்று, சசிகலா உறவினர் இளவரசி, சென்னை செய்திகள், சசிகலா செய்திகள், tamilnadu top news, sasikala news, Disproportionate assets case, assets case
ilavarasi affected by corona
author img

By

Published : Jan 23, 2021, 3:57 PM IST

பெங்களூரு (கர்நாடகம்): சொத்து குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த சசிகலா உறவினர் இளவரசிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறையில் இருந்த இளவரசிக்கு கரோனா பரிசோதனை செய்ய கர்நாடகா சிறைத்துறை முடிவு செய்தது. சசிகலாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் 2 பெண் கைதிகள், சிறை அலுவலர்கள் உள்பட 8 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் இளவரசிக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம் 27ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. இச்சூழலில் நேற்று முன்தினம் (ஜனவரி 21) சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரை பெங்களூருவில் உள்ள பௌரிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்ததால், அவர் விக்டோரியா மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.