பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி விகே சசிகலா கடந்த 20ஆம் தேதி கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீரடைந்துவருகிறது. இதனால் அவர் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உறவுக்கார பெண் இளவரசியும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சேர்த்த வழக்கில் சசிகலாவுக்கு 2017ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றம் அளித்த தண்டனை காலத்தை அவர் முழுமையாக சிறையில் அனுபவித்துவிட்டார். இதனால் வருகிற 27ஆம் தேதி விகே சசிகலா விடுதலை ஆகிறார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது’ - அமைச்சர் ஜெயக்குமார்!