டெல்லி: இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப்படையின் தலைமை இயக்குநராக இருந்து வந்த ஐபிஎஸ் அலுவலர் சஞ்சய் அரோரா, டெல்லி காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சஞ்சய் அரோரா நாளை பொறுப்பேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 1989ஆவது பேட்ச் ஐபிஎஸ் அலுவலரான சஞ்சய் அரோரா, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் காவல் துறை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையராகவும் சேவையாற்றியுள்ளார். பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் உள்ளிட்டவற்றிலும் பணிபுரிந்துள்ளார்.
இதையும் படிங்க: சஞ்சய் ராவத் வீட்டில் மீண்டும் அமலாக்கத் துறை ரெய்டு... கைது செய்ய வாய்ப்பு?