சாம்சங் நிறுவனம், "கேலக்ஸி இசட் ஃபிளிப் 4" மற்றும் "கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4" ஆகிய லேட்டஸ்ட் ஸ்மார்ட் ஃபோன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மடிக்கக் கூடிய ஸ்மார்ட் போன்களான இரண்டிலும் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
இவற்றை வாங்குவதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று(ஆக.16) தொடங்கியது. இந்த நிலையில், முன்பதிவு தொடங்கிய 12 மணி நேரத்தில் 50 ஆயிரம் செல்போன்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சாம்சங் இந்தியாவின் மூத்த அலுவலர் ராஜு புல்லன் கூறும்போது, "முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 12 மணி நேரத்தில் 50 ஆயிரம் செல்போன்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஒன்றரை மடங்கு அதிகமாக ஃபிளிப் போன்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்.
எங்களது இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களின் விற்பனை, சில்லறை வணிகத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களுக்கு, பிரீமியம் ஸ்மார்ட் போன்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன" என்று கூறினார்.
இதையும் படிங்க:ஆப்பிள் நிறுவனத்தின் பெரிய திரை iPad செப்டம்பரில் அறிமுகம்