ETV Bharat / bharat

சமாஜ்வாதி யாருடன் கூட்டணி- அகிலேஷ் பரபரப்பு பேட்டி! - பாஜக

வருகிற சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் பேட்டியளித்தார்.

Akhilesh Yadav
Akhilesh Yadav
author img

By

Published : Jul 1, 2021, 7:28 PM IST

லக்னோ (உத்தரப் பிரதேசம்) : நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அடுத்த அண்டு (2022) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இங்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

அகிலேஷ் யாதவ் பேட்டி

இந்நிலையில் மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையாக அதிக இடங்களில் மிகப்பெரிய வெற்றிபெறுவோம் என முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “உத்தரப் பிரதேச மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். வாக்குச் சீட்டு வாயிலாக அந்த மாற்றத்தை மக்கள் அளிப்பார்கள்.

பாஜக மீது விளாசல்

ஏனெனில் மாநிலத்தில் பாஜக தலைமையிலான காட்டாட்சி நடைபெறுகிறது. மக்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளன. ஆட்சித் தொடங்கி இந்நாள் வரை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதையும் பாஜக செய்யவில்லை.

மாறாக மக்களை திசைதிருப்பி ஏமாற்றிவருகிறது. இதனால் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் குப்பைத் தொட்டிக்கு சென்று விட்டன என்பது உறுதியாகிறது. மக்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளனர். இதற்கு அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலே சாட்சி.

மீண்டும் சமாஜ்வாதி ஆட்சி

நாங்கள் உறுதியாக கூறுகிறோம், சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்” என்றார்.

தொடர்ந்து தேர்தல் கூட்டணி தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க : 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேரும் மாயாவதி-முலாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.