புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவருடைய இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் ரங்கசாமி, மீனவர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்தநிலையில், இன்று(நவ.16) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு(Red Ration Card) மழை நிவாரணமாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதன்மூலம் 1 லட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடும்ப அட்டைக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம்