ETV Bharat / bharat

ராஜஸ்தானில் கொலுசுக்காக 108 வயது மூதாட்டியின் கால்களை வெட்டிய கொடூரம் -அமைச்சர் கண்டனம்

ஜெய்ப்பூரில் 108 வயது மூதாட்டியிடம் நகைகளைப் பறிப்பதற்காக கால்களை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 10, 2022, 1:53 PM IST

ஜெய்ப்பூர்(ராஜஸ்தான்): வெள்ளி கொலுசுகளைத் திருடுவதற்காக 108 வயது மூதாட்டியின் கால்களை வெட்டிய கொடூரச்சம்பவம் நேற்று (அக்.9) நடந்துள்ளது. பஷ் பதன்புரா மீனா காலனியில் வீட்டில் தனியாக இருந்த 108 வயதான ஜமுனா தேவி என்ற மூதாட்டியிடமிருந்து அவர் அணிந்திருந்த வெள்ளி கொலுசுகள் மற்றும் அவர் வைத்திருந்த தங்க பதக்கங்களை பறித்துச்செல்ல முயன்ற கொள்ளையர்கள், அவரது கால்களை வெட்டி படுகொலை செய்தனர்.

பின்னர் கோயிலிருந்து வீடு திரும்பிய அவரது மகள் ஜமுனா தேவி, இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து சிகிச்சைக்காக, அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றில் துண்டிக்கப்பட்ட கால்களுடன் ஜமுனா தேவியினை அனுமதித்த நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மூதாட்டி இறந்துவிட்டதாக கூறினர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், இதுகுறித்து தகவலறிந்த அம்மாநில அமைச்சர் மகேஷ் ஜோஷி, கொடூரமான இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்யவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கொலுசுகள் உள்ளிட்டவற்றை பறிப்பதற்காக கொள்ளையர்கள் செய்த இப்படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய பெண் மும்பையில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.