கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த காவலி தண்டாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் துங்கபத்ரா ஆற்றங்கரையில் நெல் பயிரிட்டார். விளைந்த நெற்பயிரை அறுவடை செய்து எடுத்துச் செல்ல துங்கபத்ரா ஆற்றைக் கடக்க வேண்டும்.
இந்நிலையில், அந்த விவசாயில் இரண்டு டிராக்டர்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடிவு செய்தார். முதல் டிராக்டர் நெல் மூட்டைகளை கரைக்கு எடுத்துவந்த நிலையில், இரண்டாவது டிராக்டருக்காக கரையில் அவர் (விவசாயி) காத்திருந்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக இரண்டாவதாக வந்த டிராக்டர் நிலைத் தடுமாறியது. ஆற்றில் சேறும் சகதியுமாக மிகுந்திருந்ததால் சீரான வேகத்தில் டிராக்டரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. மெதுவாக ஓட்டுநர் டிராக்டரை இயக்கியபோதும், எதிர்பாராதவிதமாக ஆற்றின் குறுக்கே டிராக்டர் கவிழ்ந்தது. இதில், 50 முதல் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் ஆற்றுக்குள் விழுந்து பாழாகின.
இதையும் படிங்க:விழுப்புரத்தில் ஆபத்தான நிலையில் நகருக்குள் வலம் வந்த டிராக்டர்!