புதுச்சேரியில் மாநில அந்தஸ்து கோரிக்கையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சிவிடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகள் மாநில அந்தஸ்து கோரிக்கையினை விடுத்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசு இதுவரை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுவாக தேர்தலின்போது மட்டுமே இக்கோரிக்கை பெரும்பாலும் முன் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் புதுவை(புதுச்சேரி) அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட தேங்காய் திட்டு பகுதியைச்சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்றிருந்தனர். அங்கு அந்த பக்தர்கள் அக்கோயிலில் பதினெட்டாம்படிக்கு கீழே மாநில அந்தஸ்து கேட்டு, பேனர் பிடித்து கோரிக்கை எழுப்பினர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த பேனரில் புதுவை மக்களின் சுயமரியாதைக்காக மாநில அந்தஸ்து வேண்டும் எனவும்; இது புதுவை மக்களின் குரல் எனவும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் பாஸ்கரன் புகைப்படம் அச்சிடப்பட்டு கோரிக்கை பேனர்களில் முன்வைக்கப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் இந்நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'பொங்கல் தொகுப்பில் ரூ.5000 ரொக்கம், கரும்பு வழங்கிடுக' - இபிஎஸ் வலியுறுத்தல்