ராஞ்சி (ஜார்க்கண்ட்): பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக, ஓய்வு பெற்ற காவலர் முகமது ஜலாலுதீன் கான் பீகார் மாநிலம் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஜார்க்கண்ட் காவல்துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றியவர். ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மற்றும் கிரிதிஹ் போன்ற மாவட்டங்களில் வெவ்வேறு காவல் நிலையங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
மேலும் பல நிலைகளில் பதவி உயர்வு பெற்று காவல்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காவல் துறையில் அவரது பங்களிப்பு களங்கம் இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. சரியான நேரத்தில் பதவி உயர்வு கிடைத்ததற்கும் இதுவே காரணமாக அறியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜலாலுதீனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வருகிறார் பிரதமர் மோடி