ETV Bharat / bharat

பெங்களூருவில் ஓய்வுபெற்ற தமிழ் விமானி, அவரது மனைவி ஆகிய இருவர் சுத்தியலால் தாக்கப்பட்டு கொலை! - பெங்களூர் ராமநகர் மாவட்ட ஈகிள்டன் ரிசார்டில் இந்திய விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற விமானி, மனைவி கொலை

பெங்களூருவில் உள்ள ஈகிள்டன் ரிசார்டில் சென்னையைச் சேர்ந்த இந்திய விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற விமானி, அவரது மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது, ​ அடையாளம் தெரியாத நபர்களால் சுத்தியலால் தாக்கப்பட்டு, கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

retired Indian Air Force pilot and his wife murdered in karnataka
சென்னையைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் ஓய்வு பெற்ற விமானி, மனைவி கர்நாடகாவில் கொலை
author img

By

Published : Feb 9, 2022, 6:59 PM IST

Updated : Feb 9, 2022, 8:36 PM IST

பெங்களூர் : ராமநகர், பிடாடி அருகே உள்ள ஈகிள்டன் ரிசார்டில் உள்ள ஆடம்பரமான வில்லாவில் நேற்று முன்தினம் பிப்.7 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற விமானி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ரகுராஜன் (வயது 70) இவர் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி ஆஷா (வயது 62), ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக இந்த வில்லாவில் வசித்து வந்தனர்.

இந்திய விமானப்படையின் ஓய்வு பெற்ற விமானி, மனைவி கர்நாடகாவில் கொலை

இந்நிலையில் இது குறித்து ராமநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்பாபு கூறுகையில், "இவர்களது மகன்கள் டெல்லியில் தங்கி தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். காலையில் இருந்து தங்கள் பெற்றோருக்குப் பலமுறை அழைப்பு விடுத்தும் மதியம் வரை பதிலளிக்கப்படாததால், ஏதோ தவறு இருப்பதாக அவர்கள் சந்தேகித்தனர்.

இதனையடுத்து, அவர்களது மகன்களில் ஒருவர் ரிசார்ட்டின் பாதுகாவலர்களிடம் தங்கள் வில்லாவிற்குச் சென்று, என்ன நடந்தது என்பதைச் சரி பார்க்கும்படி தெரிவித்தார். இரண்டு பாதுகாவலர்கள் அங்கு சென்று, அவர் வீட்டு காவலாளியான ஜோகிந்தர் சிங்கை சந்தித்தனர்.

பெங்களூருவில் ஓய்வுபெற்ற தமிழ் விமானி, அவரது மனைவி ஆகிய இருவர் சுத்தியலால் தாக்கப்பட்டு கொலை!

ரகுராஜனும் அவரது மனைவியும் அதிகாலையில் வெளியே சென்றுவிட்டதாகக் காவலர்களிடம் சிங் கூறினார். இதையடுத்து பாதுகாவலர்கள் மகன்களில் ஒருவருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் சிங்கின் பதிலை நம்பவில்லை மற்றும் பாதுகாவலர்களை வில்லாவின் உள்ளே சென்று பார்க்கச் சொன்னார்.

இதையடுத்து பாதுகாவலர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் தம்பதியின் உடல்கள் கிடந்தன. அதற்குள் சிங் தப்பியோடியிருக்கிறார்.

அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபர்கள் சுத்தியலால் ரகுராஜன், ஆஷா ஆகியோரின் தலையில் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

அவர்களது நாய்கள் மற்றும் தோட்டத்தைப்பராமரிக்க பணியமர்த்தப்பட்ட ஜோகிந்தர் சிங், மற்றவர்களின் உதவியுடன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. வில்லாவில் சிங்குடன் மற்றொரு நபரைக் பாதுகாவலர்கள் கண்டுள்ளனர்.

மேலும், இச்சம்பவம் நடந்த இடத்தில் பிடாதி காவல்துறையினர் ஆய்வு செய்தனர். தம்பதியரின் உடல்கள் பிணவறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

அவர்களின் மகன்கள் வந்த பிறகு பிரேதப்பரிசோதனை நடைபெறும். இருவரின் கொலை குறித்து பிடாதி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்து முன்னணித் தலைவரை கொல்ல முயற்சி: 7 பேர் கைது

Last Updated : Feb 9, 2022, 8:36 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.