ETV Bharat / bharat

மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்!

author img

By

Published : Apr 29, 2021, 9:34 PM IST

கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் மையங்களில் மாற்றுத் திறனாளிகள் வெகு நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமெனவும், சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Government of india
Government of india

நாடு முழுவதும் கரோனா தொற்றின் பரவல் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தநிலையில், மாற்றுத் திறனாளிகள் கரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வெகு நேரமாக வரிசையில் காத்திருந்து, கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, கரோனா தடுப்பூசி, பரிசோதனை முகாம்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக, சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் (MoSJ & E) மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.