ETV Bharat / bharat

Supriya Sule: அஜித் பவார் அதிருப்தியா..? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்ரியா சுலே!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(NCP) செயல் தலைவராக சுப்ரியா சூலே நியமிக்கப்பட்டுள்ளதற்கு அஜித் பவார் அதிருப்தியில் உள்ளதாக வெளியான தகவலுக்கு அது முற்றிலும் வதந்தி என சுப்ரியா சுலே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

unhappy
தேசியவாத காங்கிரஸ் கட்சி
author img

By

Published : Jun 12, 2023, 3:27 PM IST

மும்பை: தேசிய அளவில் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சரத்பவார். மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அரசியல் வியூகங்களை முன்னெடுப்பதில் முதன்மையானவராக விளங்குகிறார். அதனால் தான் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு என்ற கோஷம் எப்போதும் சரத்பவாரை முன்வைத்தே நகர்த்தப்படுகிறது.

அஜித் பவார் வாழ்த்து: ஜூன் 10 அன்று என்சிபி நிறுவன தினத்தன்று, கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார், கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோரை அறிவித்தார். சரத் பவாரின் மைத்துனரான அஜித் பவார், புதிய பொறுப்பாளர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜித் பவாரால் கையாளப்பட்ட பொறுப்பிலும் சுலே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், ஜூன் 11-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுப்ரியா சுலே, "அஜித் பவார் மகிழ்ச்சியாக இல்லை என்று யார் கூறுகிறார்கள்? யாராவது அவரிடம் கேட்டார்களா? இது தொடர்பான செய்திகள் அனைத்தும் வதந்திகள் மட்டுமே" என்று கூறினார்.

முன்னதாக அஜித் பவார் தன்னை பற்றி பரவிய அதிருப்தி செய்திகளை நிராகரித்தார். மேலும் கட்சியின் முடிவில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கட்சி தனக்கு எந்தப் பொறுப்பும் வழங்காதது குறித்து நான் அதிருப்தியில் உள்ளேன் என சில ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சரத்பவார், "ஜனநாயகத்தில் இருந்துகொண்டு பெரும்பான்மையினருக்கு மதிப்பளித்து, புதிய தலைமை பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே ராஜினாமா விவகாரத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தேன்" என்று கூறினார்.

முன்னதாக நேற்று சுப்ரியா சுலே புனே சென்று பல கட்சி தொண்டர்களை சந்தித்தார். கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, சுலே சென்ற முதல் பயணம் இதுவாகும். புனேவில் காந்தி பவனில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் மூத்த தலைவர் பதவிக்கு அஜித் பவாரின் பெயர் அடிபட்ட நிலையில் அவருக்கு சரத் பவார் எந்தப் பதவியையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:obey எல்லாம் பண்ண முடியாது! கேஸ் போடுறோம் நீங்க பாத்துக்கோங்க - மண் அள்ளிய விவகாரத்தில் வெளியான ஆடியோவால் சர்ச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.