ETV Bharat / bharat

மே.வங்கத்தில் உச்சம் தொட்ட குழந்தைகள் உயிரிழப்பு - 2 மாதங்களில் இவ்வளவா?

கடந்த இரு மாதங்களில் மட்டும் மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத அளவில் குழந்தைகள் இறப்பு பதிவாகி உள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 10, 2023, 2:48 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிலவும் மர்ம நோய் காரணமாக கடந்த 2 மாதங்களில் மட்டும் 123 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த 123 குழந்தைகளில், 115 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த புதன்கிழமை (மார்ச்.8) இரவில் மட்டும் அடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் இறப்பு விவகாரத்தில் மாநில அரசு அலட்சியம் காட்டுவதாக கூறி உள்ள எதிர்க்கட்சிகள், இது தொடர்பாக சட்டப் பேரவையைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அதேநேரம் மேற்கு வங்கம் மாநில தலைநகரான கொல்கத்தாவில் மட்டும் தான் அதிகபட்ச குழந்தைகள் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தாவில் உள்ள பி சி ராய் மருத்துவமனையில் உட்சபட்ச குழந்தைகள் இறப்பு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த மருத்துவமனையில் மட்டும் 50 குழந்தை உயிரிழந்ததாக கூறப்பட்டு உள்ளது. மேலும் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் 20 குழந்தைகளும், ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் 28 குழந்தைகளும் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்தராஞ்சன் சிஷூ சதான் மருத்துவமனையில் 10 குழந்தைகளும் மற்றொரு அரசு மருத்துவமனையான குழந்தைகள் நல கழகத்தில் 7 பேரும் உயிரிழந்ததாக கூறப்பட்டு உள்ளது.

அடினோவைரஸ் தாக்குதல் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பு நிகழ்வதாக கூறப்படும் நிலையில், இது குறித்து கலந்து ஆலோசிக்க எதிர்க் கட்சிகள் அழைத்த போதம் மாநில அரசு மறுத்து விட்டது. மேலும் மாநில அரசு மேற்கொண்டு உள்ள நோய் தடுப்பு பணிகளை எதிர்க் கட்சிகள் அரசியலாக்குவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய சுகாதரத் துறை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா, "கடந்த மார்ச் 6 ஆம் தேதி குழந்தைகள் உயிரிழப்பு மற்றும் அடினோ வைரஸ் பிரச்சினைகள் குறித்து சட்டப் பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது ஒன்று பேசாமல் மவுனம் காத்த எதிர்க் கட்சிகள் தற்போது இந்த பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாக" அவர் கூறினார்.

சளி, காய்ச்சல், மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடினோவைரஸ் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்தும் பணியில் மாநில சுகாதாரத்துறை முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: தாயை பிரிந்து பரிதவித்த 4 புலிக்குட்டிகள்.. தாயிடம் சேர்க்க போராடும் 300 பேர் கொண்ட குழு.. ஆந்திராவில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.