ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் 29 நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடிக்கப்படவில்லை: காரணம் என்ன? - Union Minister Nitin Gadkari

தமிழ்நாட்டில் ரூ.10,992 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்படாமல் தாமதமாகிவருகின்றன.

highway projects
highway projects
author img

By

Published : Mar 23, 2021, 8:06 PM IST

தமிழ்நாட்டில் 2017-20ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குள் 29 திட்டங்கள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 683 கி.மீ. தூரத்திற்கான இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.10,992 கோடியாகும். இந்தத் திட்டங்கள் பல்வேறு காரணங்கள் காரணமாக மிகத் தாமதமான கதியில் செயல்பட்டுவருகிறது.

சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி நான்கு வழிச்சாலை, களியக்காவிளை-கன்னியாகுமரி, கொல்லம்- திருமங்கலம் சாலை விரிவாக்கம், நத்தம்-கொட்டம்பட்டி, நத்தம்-செட்டிக்குளம் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்கள் 2020ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்ற இலக்கு வைக்கப்பட்டிருந்தது.

முக்கியத் திட்டங்கள்
முக்கியத் திட்டங்கள்

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு இந்தத் திட்டங்கள் முடிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் கூறுகையில், நிலம் கையகப்படுத்துதலில் சிக்கல், மணல் தட்டுப்பாடு, ஒப்பந்ததாரர்களின் மோசமான செயல்பாடு, சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைப்பதில் தாமதம், பொதுமக்களின் போராட்டங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் திட்டங்கள் நிறைவேற தாமதமாகிறது என்றார்.

அதேவேளை, இந்தத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த, துறை சார் அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், மாநில அரசு நிர்வாகம் உள்ளிட்டவற்றுடன் தொடர்ந்து ஆலோசித்துவருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

தாமதத்திற்கு காரணங்கள்
தாமதத்திற்கு காரணங்கள்

அதேபோல, மழைக் காரணமாக பாதிக்கப்பட்ட 19 நெடுஞ்சாலைகளைப் புனரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுவருவதாகவும், அதில் 11 ஒப்பந்ததார்களின் செலவிலும், மீதமுள்ள எட்டிற்கு அரசு சார்பில் ரூ.9.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் - வைகோ கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.