தெலங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டம் காந்தாரி காவல் நிலையத்தில் நேற்று (நவ. 17) இரவு இரண்டு தரப்பினர் புகார் அளிக்கச் சென்றனர். காவல் நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த, அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இதில் இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் இருந்த கம்பு, நாற்காலி உள்ளிட்டவற்றைக் கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர். அதில் ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.
இதுகுறித்து காந்தாரி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: குடிபோதையில் இரு தரப்பினரிடையே மோதல்: இருவருக்கு பலத்த காயம்!