எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், பிரம்மோஸ் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்கான திறன் நிறுவனத்திற்கு உள்ளதாகவும் பிரம்மோஸ் தலைமை செயல் அலுவலர் சுதீர் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இந்திய, ரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்ட பிரம்மோஸ் நிறுவனம் எடை குறைவான ஏவுகணையை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. சுகோய் 30 எம்கேஐ, எல்சிஏ தேஜாஸ் ஆகிய விமானங்களுடன் இணைத்து இது உருவாக்கப்படும்" என்றார்.
அடுத்த 5 ஆண்டுகளில், 5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனை நிறைவேற்றும் வகையில், எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது.