ராஜ்கோட்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படவுள்ளன.
பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் அனல் பறக்கத் தொடங்கி உள்ளன. இந்த தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபாவும் களம் காணுகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்ட ரிவாபா, தற்போது ஜாம்நகர் வடக்கு(Jamnagar North) தொகுதியில் பா.ஜ.க. சார்பாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் தன் மனைவிக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர், குஜராத் சட்டமன்ற தேர்தல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போல் உள்ளது. என் மனைவி ரிவாபா பா.ஜ.க. சார்பில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ஜாம்நகர் தொகுதி மக்கள், மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் ரிவாபாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
1985ஆம் ஆண்டு முதல் ஜாம்நகர் வடக்கு தொகுதி பா.ஜ.க. வசம் உள்ளது. ஜாம்நகர் வடக்கு தொகுதியில் வேறு எந்த கட்சியும் இதுவரை வென்றது இல்லை என்பதால் ரிவாபா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் ரவீந்திர ஜடேஜாவின் தங்கை நைனாபா ஜடேஜா காங்கிரஸ் சார்பாக தேர்தல் பணியாற்றி வருகிறார்.
-
જામનગર ના મારા તમામ મિત્રો ને મારુ દીલ થી આમંત્રણ છે. જય માતાજી🙏🏻 pic.twitter.com/olZxvYVr3t
— Ravindrasinh jadeja (@imjadeja) November 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">જામનગર ના મારા તમામ મિત્રો ને મારુ દીલ થી આમંત્રણ છે. જય માતાજી🙏🏻 pic.twitter.com/olZxvYVr3t
— Ravindrasinh jadeja (@imjadeja) November 13, 2022જામનગર ના મારા તમામ મિત્રો ને મારુ દીલ થી આમંત્રણ છે. જય માતાજી🙏🏻 pic.twitter.com/olZxvYVr3t
— Ravindrasinh jadeja (@imjadeja) November 13, 2022
ஒரு புறம் மனைவி மற்றொரு புறம் உடன் பிறந்த தங்கை என ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் வெவ்வேறு கட்சி சார்பில் களமிறங்குவதால் ’இருதலைக்கொள்ளி எறும்பு போல’ எனும் பழமொழிக்கு ஏற்ப ரவீந்திர ஜடேஜாவின் நிலை மாறி உள்ளது.
இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட்ட மனைவி பலி; சோகத்தில் கணவர் தற்கொலை...