பெங்களூரு: கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில் அரியவகை ஆழ்கடல் உயிரினமான கூஸ் பார்னாக்கிள்ஸ் தென்பட்டது. இதைக்கண்ட மக்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
கூஸ் பார்னாக்கிள்ஸ், நண்டுகள் மற்றும் நத்தைகள் போல ஷெல்கள் கொண்ட உயிரினமாகும். பெரும்பாலும் குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. மற்ற நாடுகளில் அரிதாகவே காணப்படுகின்றன. பாறைகளும், பவலப்பாறைகளும் கொண்ட கடற்கரைகளில் வாழ்கின்றன. சில வகைகள் ஆழ்கடலிலும் வாழ்கின்றன.
இந்த கூஸ் பார்னாக்கிள்ஸ் 2 முதல் 8 செமீ வரை வளரும். உலகின் மிக விலையுயர்ந்த கடல் உணவுகளில் கூஸ் பார்னாக்கிள்ஸ் முக்கியமானது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் உள்ள உணவாகங்களில் எளிதாக கிடைக்கிறது. இதன் தோற்றம் காண்பதற்கு மிகவும் வித்தியசமாக இருப்பதால் மக்கள் வியப்பாக பார்க்கின்றனர். இதனால் ஆபத்து கிடையாது என்று கார்வார் கடல் உயிரியலாளர் சிவகுமார் ஹராகி தெரிவித்தார்.
இதையும் படிங்க: இமாச்சலில் 9 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த உடும்புகளின் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு