இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து பூஞ்சை தொற்று பாதிப்பும் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது. மியூகோர்மைகோஸிஸ் (mucormycosis) எனப்படும் கறுப்பு பூஞ்சை பாதிப்பு நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளை, பச்சை பூஞ்சை பாதிப்புகள்
இதே போன்று மஞ்சள் பூஞ்சை தொற்று பரவியதாக கடந்த சில நாள்களாக செய்திகள் வெளியான நிலையில், தலைநகர் டெல்லி, குஜராத் மாநிலம், வதோதரா, மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் ஆகிய பகுதிகளில் வெள்ளைப் பூஞ்சை, பச்சை பூஞ்சை பாதிப்புகள் பரவத் தொடங்கியுள்ளன.
இது குறித்து குஜராத்தைச் சேர்ந்து மருத்துவர் ஷீதல் மிஸ்திரி, ”சுவாசப் பகுதிகளை தாக்கிப் பரவும் இந்தப் பூஞ்சை தொற்றுகள் பல்வேறு வகைகளைச் சேர்ந்தவை. எனவே இவற்றை வெறும் வண்ணங்களை வைத்தே வரையறை செய்ய முடியாது. பச்சை, க்ரே, வெள்ளை, பிரவுன் என பல வண்ணங்களில் இவை உள்ளன.
இவற்றை பொதுவாக அஸ்பர்கிலோஸிஸ் (aspergillosis) என்ற மருத்துவப் பெயரில் அழைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Covid 19: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,11,298 பேருக்குத் தொற்று