மும்பை(செம்பூர்): சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரன்வீர் சிங் ஒரு பிரபல நாளிதழுக்காக அழித்த நிர்வாண புகைப்பட போட்டோ சூட் பல சர்ச்சைகளைக் கிளப்பியது. இதனையடுத்து நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக மும்பை செம்பூர் காவல்நிலையத்தில் ஓர் பெண்ணியவாத அமைப்பினரால் வழக்கு பதியப்பட்டது.
இதனையடுத்து, ரன்வீரிடம் விளக்கம் கேட்க இரண்டு முறை செம்பூர் காவல்நிலையத்திலிருந்து காவல்துறையினரை அனுப்பியும் ரன்வீரைத் தொடர்புகொள்ள முடியாமல் போனது. இந்நிலையில், தற்போது நடிகர் ரன்வீர் சிங் தனது தரப்பு சட்ட வல்லுநர் குழுவுடன் செம்பூர் காவல் நிலையம் சென்று தனது விளக்கத்தைக் காவல்துறையினரின் முன் சுமார் இரண்டு மணி நேரம் அளித்தார்.
எந்த நிறுவனம் இந்த போட்டோ சூட்டை நடத்தியது..?, எங்கு எப்போது இந்தப் போட்டோ சூட் நடத்தப்பட்து..?, இதனால் பெண்களின் மனம் புண்படுமென எண்ணம் இருந்ததா..? போன்ற கேள்விகள் ரன்வீரிடம் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேல் விசாரணைக்காகவும் காவல்துறையினர் ரன்வீர் சிங்கிடம் பல கேள்விகளை முன்வைத்தனர்.
இந்த விவகாரத்தில் நடிகர் ரன்வீர் சிங் காவல்துறையினருக்கு தன் முழு ஒத்துழைப்பைத் தர ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக மும்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இசைப்புயலை கவுரவித்த கனடா நாட்டின் மேயர்... ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் நெகிழ்ச்சி