ETV Bharat / bharat

முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் ரங்கசாமி!

ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடக்கும் விழாவில் புதுச்சேரி முதலமைச்சராக என்.ரங்கசாமி இன்று பதவி ஏற்கிறார்.

author img

By

Published : May 7, 2021, 6:43 AM IST

ரங்கசாமி
ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளையும், பாஜக ஆறு தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி இன்று (மே.07) பிற்பகல் 1.20 மணிக்கு பொறுப்பேற்க உள்ளார். இதில் என். ரங்கசாமி மட்டுமே பதவி ஏற்கின்ற நிலையில், அவரது கூட்டணி கட்சி அமைச்சர்கள் பதவி ஏற்கவில்லை.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஆனால், புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு, உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,110 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 பேர் உயிரிழந்தனர்.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு, கடற்கரை சாலையில் நடைபெற இருந்த பதவி ஏற்பு விழா, திடீரென ரத்து செய்ததோடு, அவ்விழாவை எளிமையான முறையில் ஆளுநர் மாளிகையில் நடத்த முடிவு செய்தனர். ஆளுநர் மாளிகையில் அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றன. கடற்கரை சாலையில் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்தும் ஏற்பாடுகளும் அகற்றப்பட்டன.

இதையும் படிங்க: முதலமைச்சராகும் தம்பிக்கு அண்ணன் அழகிரி வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.