ETV Bharat / bharat

'தடுப்பூசி போடப்போகிறேன்' - முகக்கவசம் அணிந்து பல்டியடித்த பாபா ராம்தேவ் - முககவசம் பாபா ராம்தேவ்

அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்த பாபா ராம்தேவ் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்
author img

By

Published : Jun 10, 2021, 10:35 PM IST

Updated : Jun 10, 2021, 11:08 PM IST

பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் கோவிட்-19 தொற்று குறித்து பல்வேறு சர்ச்சைப் கருத்துகளைத் தெரிவித்து நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலையைச் சந்தித்துவருகிறார்.

அலோபதி மருத்துவம், மருந்துகள், தடுப்பூசி ஆகியவற்றை விமர்சித்துப் பேசிய ராம்தேவ், அலோபதி மருத்துவத்தை முட்டாள் அறிவியல் எனக் கூறினார்.

இதற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட முன்னணி மருத்துவக் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்து பாபா ராம்தேவிடம் மன்னிப்புக் கோரின. இந்திய சுகதாரத் துறை அமைச்சரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தனது கருத்தை ராம்தேவ் திரும்பப்பெற்றார்.

இந்நிலையில், இன்றைய (ஜூன் 10) யோகா வகுப்பிற்கு முகக்கவசம் அணிந்துவந்த ராம்தேவ், மருத்துவர்கள் நமக்கு கடவுள் போன்றவர்கள். அனைத்து மருத்துவர்களும் தவறானவர்கள் கிடையாது. எனது கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும், தான் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவுள்ளேன் எனவும் கூறியுள்ளார். பொதுவெளியில், ராம்தேவ் முகக்கவசம் அணிந்துகொள்வது இதுவே முதல்முறை.

இதையும் படிங்க: ’பிரதமர் மோடிதான் டாப் தலைவர்’ - சிவசேனா சஞ்சய் ராவத்

Last Updated : Jun 10, 2021, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.