ETV Bharat / bharat

அடுத்த ஆண்டு டிசம்பரில் ராமர் கோயில் திறக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி

author img

By

Published : Oct 12, 2022, 8:14 AM IST

அயோத்தியில் விரைந்து கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், அடுத்த ஆண்டு டிசம்பரில் திறக்கப்படுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு டிசம்பரில் ராமர் கோயில் திறக்கப்படும்  - நரேந்திர மோடி

உஜ்ஜைன் : அயோத்தியில் அடிக்கல் நாட்டப்பட்ட ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது எனும் அடுத்த ஆண்டு டிசம்பரில் திறக்கப்படுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் மஹால்கல் லோக் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.அடுத்த ஆண்டு டிசம்பரில் திறக்கப்படலாம். காசி விஷ்வநாதர் கோயில் நமது இந்திய கலாசாரத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது. இதுவரைக் காணாத ஓர் வளர்ச்சி சோம்நாத், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற சிவதலங்களில் நடைபெற்று வருகிறது.

நாங்கள் ஆன்மிகத்தலங்களின் பெருமைகளை மீட்டெடுக்கிறோம். இந்தியாவின் ஆன்மிக நெறிமுறைகளுக்கு மையமாக விளங்குகிறது உஜ்ஜைன். சிவனின் துணையில் எதுவும் சாதாரணமில்லை. அனைத்தும், அற்புதமானது, மறக்கமுடியாதது, நம்பமுடியாதது.

இந்த மஹாகல் லோக்கின் பிரமாண்டம், உலகளவில் நமது கலாசார அடையாளமாக இருக்கும். உஜ்ஜைனின் ஒவ்வொரு மூலையிலும் ஆன்மிகம் பரவியுள்ளது” எனப் பேசினார். மேலும், ராமர் கோயிலின் கட்டுமானச் செலவு மட்டும் தற்போதைய நிலவரப்படி சுமார் 1800 கோடி ரூபாய் ஆகும்.

இந்தக் கோயிலுக்கான அடிக்கல் நாட்டும்விழா கடந்த 2020ஆம் ஆண்டு ஆக.5 அன்று நடைபெற்றதும், கடந்த ஜூன் மாதம் இந்தக் கோயிலின் கர்ப்ப கிரகத்திற்கான அடிக்கல்லை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹனுமன் கோயிலுக்கு ரயில்வே அதிகாரிகள் நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.