கர்நாடக மாநில காங்கிரஸ் குழுத் தலைவர் சிவகுமார், மண்டியாவில் நடந்த "100 நாட் அவுட்" பரப்புரையின் இறுதி நாளான நேற்று முன்தினம் (ஜூன் 15) அணிவகுப்பு நடத்தினார்.
பணமோசடி
இதுகுறித்து சிவகுமார் தெரிவித்ததாவது, "ராமர் கோயில் கட்டுமானப்பணிக்காக மக்கள் தங்கள் சேமிப்பை நன்கொடையாக அளித்துள்ளனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பணத்தை மோசடி செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடையவர்களை கைதுசெய்து வழக்குத் தொடர மத்திய மற்றும் உத்தரபிரதேச அரசுகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலைக்கு எதிர்ப்பு
"100 நாட் அவுட்" போராட்டம் குறித்து பேசிய சிவகுமார், “பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 65 வரி விதிக்க அரசு விதித்து வருவதாகவும், எரிபொருளுக்கு உண்மையில் ரூ. 35 மட்டுமே செலவாகும் என்றும் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் விலை ரூ. 52ஆக அதிகரித்தபோது, அவரும் எதிர்ப்புத் தெரிவித்தார். உடுப்பி-சிக்மகளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஷோபா கரந்லேஜும் தனது தலையில் ஒரு எரிவாயு சிலிண்டரை சுமந்து எதிர்ப்பு தெரிவித்ததார்” என்று தெரிவித்தார்.
மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பிக்பாக்கெட் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.