டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு வீடு வீடாக சென்று நிதி திரட்டப்பட்டுவருகிறது. இதற்கான பணிகளை ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா முன்னெடுத்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மார்ச் 4ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்குள் ரூ.2,500 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் கூறுகையில், “தற்போது ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுமக்களிடத்தில் திரட்டிய நிதிகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
தற்போதுவரை திரட்டப்பட்ட நிதி ரூ.2500 கோடியை நெருங்கியுள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் வாயிலாகவும் நிதி அளிக்கலாம். பொதுமக்களிடத்தில் திரட்டப்பட்ட நிதி தொடர்பாக ஆடிட் பணிகள் நடைபெறுவதால் வீடு வீடாக சென்று நிதி சேகரித்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது” என்றார்.