நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இரு அவையிலும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றன.
மேலும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட 18 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மாநிலங்களவை அமர்வு மழைக்கால கூட்டத்தொடரில், பெகாசல் விவகாரம், கோவிட்-19 பாதிப்பு, விலைவாசி உயர்வு தொடர்பாக உரிய விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் மாநிலங்களவைத் தலைவர் இருக்கை முன்வந்து அமளியில் ஈடுபட்டனர்.
உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கண்டனம் தெரிவித்தார். இருப்பினும் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: NEETஇல் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு - பிரதமருடன் அமைச்சர் பூபேந்திர் யாதவ் சந்திப்பு