ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள டாங்ரி கிராமத்தில் நேற்றிரவு (ஜனவரி 1) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து உடல்களை மீட்டனர். அதோடு படுகாயடமடைந்தவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் இன்று (ஜனவரி 2) உயிரிழந்தார்.
இதனிடையே டாங்ரி கிராம மக்கள், எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது. துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சம்பவ இடத்தை பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதோடு முழு கடையடைப்பு போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுகுறித்து ரஜோர் போலீசார் கூறுகையில், "நேற்றிரவு டாங்ரி கிராமத்தில் 50 மீட்டர் இடைவெளியில் உள்ள மூன்று வீடுகளுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் 13 பேருக்கு குண்டடி பட்டது. 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த 9 பேரின் உடல்களில் பாய்ந்த குண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளதால், உயிரிழப்பை குறைந்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன