நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார காலம் முழு ஓய்வில் இருக்க மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி உயர் ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவரின் ரத்த அழுத்தம் சீராகி, உடல் நிலை தேறியது. அதனால் இன்று(டிச.27) ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அந்த அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாரம் முழு ஓய்வில் இருந்து, ரத்த அழுத்தத்தை கண்காணித்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதேபோல் குறைந்த அளவிலான செயல்பாடுகள், மன அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும் மருத்துவக்குழுவினர் அறிவுரை நல்கியுள்ளனர்.
மேலும் கரோனா காலம் என்பதால், புறச்செயல்பாடுகளை குறைத்துக்கொள்ளும்படி ரஜினிகாந்திற்கு மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.