ETV Bharat / bharat

பறவைக் காய்ச்சல் எதிரொலி: ரெட் அலர்ட் விடுத்த ராஜஸ்தான் வனத் துறை

ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநில வனத் துறை ரெட் அலர்ட் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

பறவைக் காய்ச்சல் எதிரொலி
பறவைக் காய்ச்சல் எதிரொலி
author img

By

Published : Jan 2, 2021, 8:01 PM IST

ஜெய்பூர்: ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்ட காகங்களை ஆய்வுசெய்ததில், அவற்றிற்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரெட் அலர்ட் எச்சரிக்கைவிடுத்துள்ள அம்மாநில வனத் துறை நிர்வாகம், மாநிலத்திலுள்ள அனைத்துப் பறவைகள் சரணாலயங்கள், வனவிலங்கு பூங்காக்கள் முழு விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஜலாவர் மாவட்டத்திலுள்ள அனைத்து கோழிப்பண்ணைகள், இறைச்சிக் கடைகளிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதனை செய்ய சிறப்புக் குழுவுக்கு அம்மாவட்ட ஆட்சியர் நிக்யா கோஹென் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய ஆட்சியர், "இங்குள்ள ராடி கி பாலாஜி கோயிலில் 100-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தது தொடர்பாக தகவல் கிடைத்தது.

இறந்த காகங்களின் மாதிரிகளைப் பரிசோதனை செய்தபோது பறவைக் காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அனைத்துப் பறவைகள் சரணாலயங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பறவைக் காய்ச்சல் பிற பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் விரைவில் பரவக்கூடியது. பொதுவாக பறவைக் காய்ச்சல் வைரசுகள் மனிதர்களைத் தாக்காது" என்றார்.

இதையும் படிங்க: கோவாக்சின் தடுப்பூசி: அவசரகால அனுமதிக்குப் பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.