ETV Bharat / bharat

மணப்பெண்ணுக்குக் கரோனா... திருமண மண்டபமாக மாறிய கோவிட் மையம்!

author img

By

Published : Dec 7, 2020, 1:14 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மணப்பெண்ணுக்குக் கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, கோவிட் மையத்தில் திருமணம் நடைபெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூர்

திருமண நாளில் மணப்பெண்ணுக்குக் கரோனா பாதிப்பு உறுதியானதால், கோவிட் மையத்தில் அனைவரும் பிபிஇ (Personal Protective Equipment) உடை அணிந்தபடியே திருமணம் நடத்தி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம், பாரா மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு திருமணம் நடத்திட பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். திருமணத்திற்கு முன்பு, மணப்பெண் கரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

இந்நிலையில், திருமண தினத்தன்று அதிகாலையில் மணப்பெண்ணுக்குக் கரோனா பாதிப்பு உள்ளதாக அறிக்கை வந்துள்ளது. சுகாதாரத் துறையினர், மணப்பெண்னை கெல்வாரா கோவிட் மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், இரு வீட்டாரும் செய்வதறியாமல் திகைத்துப் போகியுள்ளனர். திருமணத்தை நிறுத்திவிடலாமா என யோசித்துள்ளனர்.

திருமண மண்டபமாக மாறிய கோவிட் மையம்

இறுதியாக, திருமணத்தை 'கெல்வாரா' கோவிட் மையத்தில், அரசின் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தினர். திருமணச் சடங்குகளை செய்த அர்ச்சகர், கல்யாண ஜோடி, மணப்பெண்ணின் தந்தை மற்றும் திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் பிபிஇ உடை அணிந்திருந்தனர்.

கல்யாண ஜோடிகள் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து திருமணம் செய்து கொண்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கோவிட் மைய வளாகத்திலேயே திருமணம் நடைபெற்ற சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.