ஜெய்ப்பூர்: இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்த நாள் முதல் தேர்தல் பரப்புரைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.
-
आज झुंझुनूं में श्रीमती प्रियंका गांधी ने प्रदेश की महिलाओं को ये 2 गारंटियां दीं:
— Ashok Gehlot (@ashokgehlot51) October 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
●₹500 में सिलेंडर 1.04 करोड़ परिवारों के लिए
● ₹10 हजार परिवार की महिला मुखिया को हर साल
महिला सशक्तीकरण के इस नए अध्याय का स्वागत जनता ने "काम किया दिल से, कांग्रेस फिर से" के उद्घोष के साथ… pic.twitter.com/cwRafpSWor
">आज झुंझुनूं में श्रीमती प्रियंका गांधी ने प्रदेश की महिलाओं को ये 2 गारंटियां दीं:
— Ashok Gehlot (@ashokgehlot51) October 25, 2023
●₹500 में सिलेंडर 1.04 करोड़ परिवारों के लिए
● ₹10 हजार परिवार की महिला मुखिया को हर साल
महिला सशक्तीकरण के इस नए अध्याय का स्वागत जनता ने "काम किया दिल से, कांग्रेस फिर से" के उद्घोष के साथ… pic.twitter.com/cwRafpSWorआज झुंझुनूं में श्रीमती प्रियंका गांधी ने प्रदेश की महिलाओं को ये 2 गारंटियां दीं:
— Ashok Gehlot (@ashokgehlot51) October 25, 2023
●₹500 में सिलेंडर 1.04 करोड़ परिवारों के लिए
● ₹10 हजार परिवार की महिला मुखिया को हर साल
महिला सशक्तीकरण के इस नए अध्याय का स्वागत जनता ने "काम किया दिल से, कांग्रेस फिर से" के उद्घोष के साथ… pic.twitter.com/cwRafpSWor
இதன் ஒருபகுதியாக, மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அக்.25-ல் தேர்தல் பேரணி மேற்கொண்டு தீவிரமாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உடன் இணைந்து பரப்புரை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து ஜுன்ஜுனு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் முதலமைச்சர் அசோக் கெலாட் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
'ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கும் ஆண்டுக்கு மூன்று தவணையாக ரூ.10,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதேபோல, 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்' என அறிவித்திருந்தார்.
இதனிடையே, அவர் மேலும் சில முக்கிய அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக இன்று அறிவித்துள்ளார். அதன் படி,
- 'அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி மற்றும் டேப்லெட்(Tab) வழங்கப்படும்.
- இலவச இன்டெர்நெட் வசதியுடன் 1 கோடி பெண்களுக்கு ஆன்ட்ராய்டு போன்கள் வழங்கப்படும்.
- மீண்டும் பழைய ஓய்வூதியத்தை கொண்டுவருவதற்கான சட்டம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- விபத்து மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுவோருக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் காப்பீடு வழங்கப்படும்.
- பசு சாணத்தை அரசே ரூ.2-க்கு வாங்கிக் கொள்ளும்' உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, நவ.23-ல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இதனை நவ.25ஆம் தேதிக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாலத்தீவு புதிய அதிபரால் இந்திய மீனவர்களுக்கு சிக்கலா? பவளத்தீவில் நடப்பது என்ன?